New year offer 2017

கனடா செய்திகள்

வை நதியின் நீர் மட்டம் உயர்வு மக்கள் வெளியேற்றம்

10/28/2019

மொன்மவுத்நகரிலுள்ள வை நதிக்கு (River Wye) அருகிலுள்ளகுடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடுமையானமழை காரணமாக வை நதியில்நீர் நிறைந்து வை நதியின் கரைகள்உடைப்பெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளன.

அதனால்அப்பகுதியில் உள்ள 34 வீடுகளின் குடியிருப்பாளர்கள்அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குடியிருப்பாளர்கள்தற்காலிகமாகத் தங்குவதற்கு நகரசபை மண்டபத்தில் இடம்ஒழுங்கு செய்யப்பட்டுள்ளடன் அவர்களை ஏற்றிச் செல்வதற்குவாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

நதியில்மேலும் நீர் பெருகி வருவதாகஎச்சரிக்கை விடுத்துள்ள வேல்ஸ் இயற்கை வளங்கள்துறை நிலைமை தீவிரமடைவதற்கு முன்னர்வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தெற்குவேல்ஸ் முழுவதும் அண்மையில் பெய்த கடுமையான மழையால்மொன்மவுத்தின் வை நதி உயர்ந்துவருகிறது.

மேலும்அடுத்த சில மணித்தியாலங்களுக்கு நீர்மட்டம் மேலும் உயரும் என்றும் வேல்ஸ்இயற்கை வளங்கள் துறையின் செயற்பாட்டுமேலதிகாரி ரிம் தெரிவித்துள்ளார்.

இதேவேளைநேற்று முன்தினம் அப்பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமானமழை பெய்ததாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது வெள்ளத்தில்சிக்கியவர்கள் அவசர மீட்புக் குழுவினரால்மீட்கப்பட்டனர்.

மேலும்மொன்மவுத்ஷையரின் ஸ்கென்ஃபிரித்தில் (Skenfrith) வசிக்கும் 25 வீடுகளின் குடிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.