கனடா செய்திகள்
கனேடிய பகுதியில் அதி பயங்கர விபத்து ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்
10/29/2019கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள கோமோகா மேற்குப் பகுதியில், இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஒரு இளைஞன் உயிரிழந்ததோடு, இருவர் படுகாயமைடந்துள்ளதாக
ஸ்ட்ராத்ரோய்-கராடோக் (STRATHROY-CARADOC)பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிடில்செக்ஸ் மத்தியைச் சேர்ந்த 18 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார், அடையாளம் கண்டுள்ளனர். காயமடைந்த இருவரும் தற்போது அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
எனினும், மற்ற வாகனத்தின் ஓட்டுநருக்கு லேசான காயங்கள் இருந்ததால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளென்டன் ட்ரைவ் மற்றும் அமியன்ஸ் வீதியில் இந்த விபத்து, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம் பெற்றது.
இந்த விபத்து, தொடர்பில் இதுவரை எந்த விதமான தகவலும் தெரிவிக்காத பொலிஸார் இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.