கனடா செய்திகள்
ஈராக்கில் துப்பாக்கிச் சூடு 14 பேர் உயிரிழப்பு 865 பேர் காயம்
10/29/2019ஈராக்கில்அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில் பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈராக் அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள்இந்த மாதத் தொடக்கத்தில் பெரும்போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஊழல் மற்றும் அரசு சேவைகளைப்பெறுவதில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்டபிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கடந்தஐந்து நாட்களாக பொதுமக்கள் சாலைகளை பெருந்திரளாகக் கூடிஅரசாங்கத்திற்கு எதிராக கோஷமிடுகின்றனர்.
இந்நிலையில்,இன்று அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றானகர்பாலாவில் ஏராளமான போராட்டக்காரர்கள் ஒன்றுதிரண்டனர்.
இதன்போதுஈராக் பாதுகாப்புப் படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில்,14 பேர் கொல்லப்பட்டனதோடு, 865 பேர்காயம் அடைந்துள்ளதாக ஈரான்பாதுகாப்புப் படையினர்தெரிவித்துள்ளனர்.