New year offer 2017

கனடா செய்திகள்

கலிபோர்னியாவிற்கு அதியுயர் சிவப்பு எச்சரிக்கை

10/30/2019

கலிபோர்னியாவின்சில பகுதிகளுக்கு லொஸ் ஏஞ்சல்ஸ் காலநிலை சேவைகள் நிறுவனம் அதியுயர்சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாமாநிலத்தின் தெற்குப் பிராந்தியத்திற்கு இவ்வாறு அதியுயர் சிவப்புஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாகலொஸ் ஏஞ்சல்ஸ், வென்டூரா, சான் பேர்னாண்டினோ ஆகியபிரதேசங்களுக்கேஇந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன்,கலிபோர்னியா மாநிலத்தின் தெற்குப் பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 128 கிலோமீற்றர் வேகத்தில்வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தீ பரவுவதை விரைவுபடுத்தும்எனக்கருதப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை,சொனாமா, விண்ட்சர், சென் பிரான்சிஸ்கோ, லொஸ்ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 74,000 ஏக்கர் நிலங்கள் தீயில்கருகியுள்ளன.

மேலும்சுமார் 123 வீடுகள் மற்றும் கட்டடங்கள்தீயினால் சேதமடைந்துள்ளன. இதனால் லொஸ் ஏஞ்செல்ஸ்உள்ளிட்ட நகரங்கள் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றதாகசர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புகருதி 9,70,000 வீடுகளின் மின் இணைப்புகள் தற்காலிகமாகதுண்டிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக சுமார் 6 இலட்சம் வீடுகளின் மின்இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.