New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் சினிமா பாணியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் இளம் ஜோடி சிக்கியது

10/30/2019

கனடாவில் நான்கு பேர் கொல்லப்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் பரபரப்பான பின்னணி தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதுதொடர்பாக இடம்பெற்று வழக்கொன்றில் சாட்சியமளித்துள்ள பிரதிவாதிகள் இருவர், தங்களின் நோக்கம் ஒருவரைக் கொல்வதுதான் என்றும் காட்டிக்கொடுத்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மூவரை கொலை செய்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Yu Chieh Liao (27) என்ற இளம்பெண் Hanock Afowerk (26) என்ற இளைஞரை சம்பவ தினத்திற்கு முன்தினமான 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி சந்தித்திருக்கின்றார்.

மறுதினம் Cody Pfeiffer (25), Tiffany Ear (39) மற்றும் Glynnis Fox (36) என்னும் சகோதரிகள் இருவர், உட்பட மொத்தம் மூன்று பேரின் உடல்கள் எரிந்த நிலையிலிருந்த கார் ஒன்றினுள் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், Calgary க்கு மேற்கே வீதியோரமாக Hanock Afowerk சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது உடலில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. பொலிஸாரின் விசாரணையில், இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து இளம்பெண்ணான Yu Chieh Liao வும் Tewodros Mutugeta Kebede (27) என்ற இளைஞரும் ரொறென்றோவில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. Yu Chieh Liao வுக்கு போலி அடையாளங்களை விற்பனை செய்வதற்கு Afowerk முயற்சித்துள்ளார்.

அவரை தடுத்து வைத்துக்கொண்டு, சித்திரவதை செய்து, பணம் முதலான பெறுமதி வாய்ந்த பொருட்களை பெற்றுக்கொண்டபின், அவரை சுட்டுக்கொன்று உடலை வீதியோரம் வீசியெறிந்துள்ளனர். இந்த குற்றச்செயல்களின்போது பிறிதொரு ஆணும் உடன் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணையின் போது, Afowerk ஐ கொலை செய்த Liao வும் Kebede யும், தங்களுடன் இருந்த Pfeiffer, Fox மற்றும் Tiffany ஆகிய மூவரும் தங்களைக் காட்டிக்கொடுத்து விடக்கூடாது என்பதற்காக, நடந்த சம்பவங்களுக்கு சாட்சியாக இருந்த அவர்களை சினிமா பாணியில் கொலை செய்துள்ளார்கள் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், குறித்த கொலைச் சம்பவங்கள் பற்றிய வழக்கு விசாரணை தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.