கனடா செய்திகள்
ரொறன்ரோவில் துப்பாக்கிசூடு ஐவர் படுகாயம்
10/31/2019வடமேற்கு ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், இரண்டு பெண்களும் மூன்று ஆண்களுமாக ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிளாக் க்ரீக் டிரைவின் கிழக்கே ட்ரெத்தேவி டிரைவ் அருகே கிளியர்வியூ ஹைட்ஸ் பகுதியில் உள்ள தாழ்வான அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பெண்கள் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என்றும் ஆண்கள் 16 தொடக்கம் 18 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர்களிற்கு ஏற்பட்டுள்ள காயங்கள் கடுமையானவை எனவும் உயிராபத்தானவை என்றும் பொலிஸார் விபரித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, கறுப்பு நிற வாகனத்தில் மூவர் தப்பிச் சென்றதனை அவதானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தப்பிசென்ற மூவரும் பதின்ம வயதுடையவர்கள் என குறிப்பிட்டுள்ள பொலிஸார், அவர்களை கைதுசெய்ய தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.