New year offer 2017

கனடா செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை - வடகொரியா

11/29/2019

சியோல்: அமெரிக்கா-வடகொரியா இடையிலான அணு ஆயுத ஒழிப்பு குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையை தொடர விரும்பவில்லை’ என்று கிம் ஜோங் உன் கூறியிருந்தார். இந்நிலையில், வடகொரியா நேற்று  அடையாளம் தெரியாத ஏவுகணை சோதனை நடத்தியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது. அதே சமயம், வட கொரியா நடத்தியது ஏவுகணை சோதனையாக இருக்க கூடும்’ என்று ஜப்பான் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. மேலும், அந்த ஏவுகணைகள் எங்கு விழுகின்றன என கண்காணித்ததாகவும் தங்களது வான் எல்லைக்குள் வரவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.