New year offer 2017

கனடா செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா சந்தேகம் - உக்ரைன் விமான விபத்து

01/10/2020

வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை தாக்குதலில், உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாகி 176 பேர் பலியாகி இருக்கலாம் என அமெரிக்கா, கனடா சந்தேகம் எழுப்புகிறது.வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை தாக்குதலில், உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாகி 176 பேர் பலியாகி இருக்கலாம் என அமெரிக்கா, கனடா சந்தேகம் எழுப்புகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதாக பல்வேறு உளவு பிரிவுகள் தகவல் தெரிவிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறியுள்ளார்.

அதேபோல் ஏவுகணை தாக்குதலில் தான் டெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகளும் சந்தேகம் எழுப்புகிறார்கள். தொழில்நுட்ப காரணங்களால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஏவுகணை தாக்குதலில் விபத்து ஏற்பட்டிருப்பதாக புகார்கள் எழுகின்றன. இது குறித்து வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளது அமெரிக்க செய்தி நிறுவனம்.