New year offer 2017

கனடா செய்திகள்

இம்ரான் கான் - பழைய தவறை பாக்., மீண்டும் செய்யாது

01/10/2020

இஸ்லாமாபாத் : ஈரான் - அமெரிக்கா இடையே நடந்த தாக்குதல் மற்றும் பிரச்னைகள் குறித்து பல நாட்டின் தலைவர்களும் தங்களது கருத்துக்களை கூறினர். இந்நிலையில் இது குறித்து பாக்., பிரதமர் இம்ரான் கானும் தனது கருத்துக்களை கூறியுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த தாக்குதலில் ஈரானின் படைதளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் உண்டானது. இந்த இருநாடுகளுக்கிடையேயான பிரச்னை குறித்து பல தலைவர்களும் தங்களது கருத்துகளை கூறி வந்தனர். இந்நிலையில் பாக்,., பிரதமர் இம்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :

கடந்த காலங்களில் பல நாடுகளுக்கு இடையேயான போர்களில் பங்கேற்றோம். ஆனால் மீண்டும் அதே தவறை பாகிஸ்தான் செய்யாது. எந்த போரிலும் நாங்கம் பங்கேற்க போவதில்லை. இருநாடுகளுக்கு இடையில் அமைதியை கொண்டு வருவதற்கான முயற்சியில் பாக்., தனது பங்கினை முன்னெடுக்கும். ஈரான், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் முடிந்தவரை முயற்சி செய்யும்.

தலைவர்கள் சந்திப்பு

இது தொடர்பாக சவுதி, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து பேசுமாறு பாக்., வெளியுறவுதுறை அமைச்சர் குரேஷியை கேட்டுக் கொண்டேன். பாகிஸ்தான் இந்த நாடுகளுடன் நட்புறவை மீட்டுக்க முயற்சி செய்யும்.

அமெரிக்கா - ஈரான் இடையேயான வேற்றுமைகளை களைய பாகிஸ்தான் உதவி செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கூறினேன். பாகிஸ்தானில் போரை நடத்தாது. இவ்வாறு இம்ரான் கூறியிருந்தார்.