கனடா செய்திகள்
01/11/2020
ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் நொறுங்கியது. இதில் 63 கனடா மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு ஈரான் பதில் சொல்ல வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா நாடுகளின் பிரச்னை மற்றும் தாக்குதல் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் தவறுதலாக உக்ரைனின் சர்வதேச ஏர்லைனர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை ஈரான் ஒப்புக்கொண்டது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 167 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விமான விபத்து தொடர்பாக உக்ரைன், கனடா அரசின் உதவியை நாடியுள்ளது. பொதுவாக விமான விபத்து தொடர்பான ஆராய்ச்சிகள், விசாரணைகளை கனடா அரசுதான் அதிகமாக நடத்தும். அவர்களிடன் இதில் பலர் தொழில்நுட்ப பிரிவினர் உள்ளனர். அதனால் உக்ரைன், கனடா அரசிடம் உதவி கேட்டுள்ளது. மேலும் பலியான 167 பயணிகளில் 63 பேர் கனடா நாட்டை சேர்ந்தவர்கள். இதனை பெரிய பிரச்னையாகவே கனடா பிரதமர் ஜஸ்டின் அணுக துவங்கியுள்ளார்.
இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் அளித்த பேட்டியில் கூறியதாவது : உக்ரைன் நாட்டு விமானத்தை ஈரான் தாக்கி அளித்தது கண்டனத்திற்கு உரியது. எங்கள் கனடா மக்கள் 63 பேர் பலியாகி உள்ளனர். இதனை ஒரு போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இந்த உயிரிழப்பு குறித்து ஈரான் பதிலளித்தே ஆக வேண்டும். இது தொடர்பாக விசாரணையை நாங்கள் துவங்கியுள்ளோம். விரைவில் ஆதாரங்கள் வெளியாகும். இவ்வாறு கூறினார்.
கனடா குடிமக்களின் உயிரிழப்புக்கு ஈரான் பதில் சொல்ல வேண்டும் என கனடா பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஈரான் - கனடா இடையே பிரச்னை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.