New year offer 2017

கனடா செய்திகள்

உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டோம்: ஈரான் ஒப்புதல்

01/11/2020

உக்ரைன் பயணிகள் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவ படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தது. ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய போது தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் பாக்தாத்தில் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் ஒப்புதல் தெரிவித்துள்ளது. விழுந்து நொருங்கிய விமானத்தில் ஈரான் நாட்டினர் 82 பேர் உள்ளிட்ட 176 பேர் பயணித்தனர்.

மனித தவறு காரணமாக உக்ரைன் பயணிகள் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் நாட்டு டிவி.,யில் செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொருங்கியதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஏவுகணை தாக்குதலால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. திட்டமிட்டு தங்கள் ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை எனவும் ஈரான் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக கனடாவும், அமெரிக்காவும் எழுப்பிய சந்தேகத்திற்கு ஈரான் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.