New year offer 2017

கனடா செய்திகள்

பாக்., மாஜி அதிபர் முஷாரப்பின் தூக்கு தண்டனை ரத்து

01/13/2020

இஸ்லாமாபாத் : தேச துரோக வழக்கில், பாக்., முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

முஷாரப், 2001 - 2008 வரை, பாக்., அதிபராக இருந்தபோது, 2007ல், அவசர நிலையை அமல் படுத்தினார். இது தொடர்பாக, 2013ல், அவர் மீது, தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவசர நிலை பிரகடனம் செய்து, அரசியல் எதிரிகளை பழிவாங்கியதாகவும், நாட்டிற்கு எதிராக சதி செய்ததாகவும், அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில், பெஷாவர் சிறப்பு நீதிமன்றம், முஷாரப்பிற்கு, தூக்கு தண்டனை விதித்தது. மேலும், தண்டனைக்கு முன் முஷாரப் இறந்தால், அவரது உடலை மூன்று நாள் தூக்கில் தொங்கவிட வேண்டும் எனவும் தீர்ப்புரையில் கூறப்பட்டிருந்தது.


இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷாரப் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் முடிவில், முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஐகோர்ட் நீதிபதிகள் ரத்து செய்தனர்.