New year offer 2017

கனடா செய்திகள்

ஒரே நாளில் சீனாவில் 97 பேர் பலி

02/11/2020

பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பால், நேற்று முன்தினம் மட்டும், 97 பேர் உயிர் இழந்தனர்.

அதையடுத்து, இந்த ஆட்கொல்லி வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 908ஆக உயர்ந்தது. மேலும், வைரஸ் பாதிப்பு, 40,171 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, உலக சுகாதார அமைப்பு, சர்வதேச நிபுணர் குழுவை, சீனாவுக்கு அனுப்புகிறது.சீனாவில், கடந்தாண்டு, டிச.,ல் துவங்கிய, கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து பரவி வருகிறது. நேற்று முன்தினம் மட்டும், 97 பேர் உயிரிழந்தனர். மேலும், புதிதாக, 3,062 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை, 908ஆக உயர்ந்தது. மேலும், 40,171 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில், 6,484 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர். இதுவரை, 3,281 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.இதைத் தவிர, இந்தியாவில் மூன்று பேர் உள்பட, 20க்கும் மேற்பட்ட நாடுகளில், 300க்கும் மேற்பட்டோருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு சீனாவில் தீவிரமடைந்துள்ளதையடுத்து, உலக சுகாதார அமைப்பு, சர்வதேச நிபுணர் குழுவை, சீனாவுக்கு அனுப்புகிறது. 'உலகப் புகழ்பெற்ற டாக்டர் புரூஸ் ஆல்வார்ட் தலைமையிலான நிபுணர் குழு, இந்த வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு, சீன அரசுக்கு உதவுவார்கள்' என, உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் அதனோம் ஜெப்ரேசஸ், சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் பயணியர்ஆசிய நாடான ஜப்பானுக்கு அருகே, 'டயமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில், பயணியர் உள்பட, 3,711 பேர் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில், நேற்று புதிதாக, 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வைரஸ் பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை, 130ஆக உயர்ந்தது.எச்சரிக்கைஉலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:இந்த வைரஸ், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் மூலமாகவே பரவி வந்தது.

இந்த நிலையில், சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சில நாடுகளில் இருந்து தகவல் வருகிறது. அதனால், உலக நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடன் இந்தப் பிரச்னையை கையாள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.புதிய வசதிகொரோனா வைரஸ் தொற்றை, 15 நிமிடத்திற்குள் கண்டுபிடிக்கும் மருத்துவ சோதனை கருவியை கண்டுபிடித்துள்ளதாக சீனாவின் டியான்ஜின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.'பீஜிங் பயோடெக்' நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி தற்போது மருத்துவ ரீதியாக சோதிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே உள்ள கருவியின் மூலம், 30 நிமிடங்களுக்குள் கொரானா தொற்றை கண்டுபிடிக்க முடியும்.சிகிச்சைக்கு ரோபோசீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்கு ரோபோக்களை பயன்படுத்த சீன அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த நோய் பரவும் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோடிக்கு பாராட்டுகொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க, சீனாவுக்கு அனைத்து வகையிலும் உதவுவதற்கு தயாராக இருப்பதாக, சீன அதிபர் ஸீ ஜின்பிங்குக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியிருந்தார்.இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங்க் சுவாங்க் கூறியதாவது:இந்தக் கடிதத்தின் மூலம், இந்தியா - சீனா இடையேயான சிறந்த நட்பு வெளிபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியாவுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

2 லட்சம் பேருக்கு சோதனை

லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:சீனாவில் இருந்து, 1,818 விமானங்களில் வந்த, 1.97 லட்சம் பயணியர் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல், நாட்டில் உள்ள, 12 முக்கிய துறைமுகங்கள் உள்பட, அனைத்து துறைமுகங்களிலும், பரிசோதனை செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.வீடு திரும்புகிறார் கேரள மாணவிநாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பு, மூன்று பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரும், கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள், சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படிக்கின்றனர்.

நாட்டில், முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட, திருச்சூர் மாணவி, குணமடைந்து வருகிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவருடைய உடலில், வைரஸ் பாதிப்பு இல்லாதது தெரியவந்துள்ளது. மற்றொரு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதில், வைரஸ் பாதிப்பு முழுமையாக நீங்கினால், அவர் வீடு திரும்புவார் என, கேரள அரசு கூறியுள்ளது.