New year offer 2017

கனடா செய்திகள்

பில்கேட்ஸ் ரூ.4,600 கோடி கப்பல் வாங்கினார்

02/11/2020

நியூயார்க் : 'மைக்ரோசாப்ட்' நிறுவனர் பில்கேட்ஸ், ௪,௬௦௦ கோடி ரூபாய் மதிப்பில், ஒரு சொகுசு கப்பலை வாங்கியுள்ளார். அந்த கப்பலில், பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளவருமான பில்கேட்ஸ், மிக பிரமாண்டமான சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை, 4,600 கோடி ரூபாய். இந்தக்கப்பல், சினோட் என்ற டச்சு நிறுவனத்தால், சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.112 மீட்டர் நீளமுள்ள இந்தக்கப்பல், ஐந்து தளங்களை கொண்டது.

இதில், இரண்டு வி.ஐ.பி., அறைகள், ஒரு காட்சி அரங்கம், 14 விருந்தினர் அறைகள், இரண்டு அதிகாரி அறைகள் மற்றும் ஒரு கேப்டன் அறை அமைந்திருக்கும்.இந்தக் கப்பலில், உடற்பயிற்சி கூடம், -மசாஜ் அறை, யோகா ஸ்டுடியோ, நீச்சல் குளத்துடன் கூடிய ஆரோக்கிய மையம் இருக்கும்.