New year offer 2017

கனடா செய்திகள்

டிரம்ப் புகழாரம் - மோடி சிறந்த மனிதர்

02/12/2020

வாஷிங்டன் : மோடி சிறந்த மனிதர் எனவும், நல்ல நண்பர் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ந்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இம்மாதம் இந்தியா வர உள்ளார். இந்திய வருகையின் போது ஆமதாபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் தனது இந்திய வருகை குறித்து டிரம்ப் கூறுகையில், நான் இந்தியா செல்கிறேன். விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடக்கும் மைதானம் வரை 5 முதல் 7 லட்சம் பேரை வரவேற்பிற்காக நிறுத்தி வைக்க பிரதமர் மோடி நினைப்பார்.

பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர். அவர் மிகச் சிறந்த மனிதர். நான் இந்தியா செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இம்மாத இறுதியில் இந்தியா செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.