கனடா செய்திகள்
கனேடிய போக்குவரத்து நிறுவனத்திற்கு 3,000 முறைப்பாடுகள்
02/28/2020சமீபத்திய காலமாக பயணிகளிடமிருந்து 3,000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாக கனேடியப் போக்குவரத்து நிறுவனம் (சி.டி.ஏ) தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கடந்த டிசம்பர் 15ஆம் முதல் பெப்ரவரி 13ஆம் திகதி எட்டு வார காலப்பகுதியில் மொத்தம் 3,037 முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.
அதன்படி விமானத் தாமதம் மற்றும் விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதற்கு, விமான நிறுவனங்கள் 1,000 டொலர்கள் வரை இழப்பீடாகச் செலுத்தவேண்டும்.
இருப்பினும், புதிய விதிமுறைகள், இழப்பீட்டை மறுக்கும் போது விமான நிறுவனங்கள் சரியான காரணங்களை வழங்கவில்லை என பல பயணிகள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளதாக கனேடியப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.