New year offer 2017

கனடா செய்திகள்

லொட்டரி டிக்கெட்டால் மாறிப்போன வாழ்க்கை... மகிழ்ச்சி வெள்ளத்தில் கனேடிய பெண்

03/04/2020

கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நண்பர் ஒருவர் பிறந்த நாள் பரிசாக லொட்டரி டிக்கெட் ஒன்றைக் கொடுக்க, அந்த டிக்கெட் இன்று அவரது வாழ்வையே மாற்றியிருக்கிறது.

ஒன்ராறியோவிலுள்ள விண்ட்சரைச் சேர்ந்த Sara Kehoeக்கு நண்பர் ஒருவர் பிறந்தநாள் பரிசாக லொட்டரி டிக்கெட் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

தன் நண்பர்கள் குடும்பத்தார் சூழ தனது பிறந்தநாள் கேக்கின் மீதிருந்த மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்த Kehoeக்கு அந்த டிக் கெட் கொடுக்கப்பட்டபோது, இது நிச்சயம் வெற்றிக்குரிய டிக்கெட்டாகத்தான் இருக்கும். எனக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் அனைவருமே என்னைச் சூழ்ந்துள்ளார்கள் என்றாராம்.

அதேபோல, அந்த சீட்டுக்கு ஒரு பெரும்தொகை கிடைத்துள்ளது என்ற தகவல் கிடைத்ததும், 10,000 டொலர்கள் பரிசு விழுந்துள்ளதாக தவறாக புரிந்துகொண்டாராம் Kehoe.

பின்னர், அவரது தந்தைதான், இல்லை உனக்கு 250,000 டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது, கவனமாகப் பார் என்றாராம்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான Kehoe, இந்த பரிசுப்பணம் தங்களுக்கு இருக்கும் கடன்களிலிருந்து விடுபட உதவும் என்கிறார்.

இது சரியான நேரம், கடந்த வருடம் நாங்கள் எல்லோருமே பல விடயங்களை தியாகம் செய்யவேண்டியிருந்தது.

நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பதை இந்த விடயம் என் பிள்ளைகளுக்கு உணர்த்தும் என்கிறார் Kehoe