New year offer 2017

கனடா செய்திகள்

சம்யுக்தா விருது விழாவில் வெடிங்மான் இணையத்தளத்திற்கு முதலிடம்

03/04/2020

திருமண நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் திருமண சேவை துறைசார் நம்மவர்களை கௌரவித்து மகிழ Samyukta Awards Night 2020 நிகழ்வு கனடாவில் நடைபெற்றது.

இந்நிகழ்வு March முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா - டொரண்டோவில் The Grand Cinnamon மண்டபத்தில் நடைபெற்றது.

உலகம் எங்கும் பரந்துவாழும் எம் உறவுகளிடையே திருமண சேவைத் துறைசார்ந்த தொழில் வல்லுனர்களை, திறமையாளர்களை உலக மக்கள் பங்களிப்போடு இனம் கண்டு மகுடம் சூட்டும் விழாவாகவே Samyukta Awards Night நிகழ்வு நடைபெற்றது.

திருமண சேவைகள் தொடர்பான பலவகையான துறைகள் கலந்துகொண்ட போதிலும் திருமண சேவைத் தளத்திற்கென வெடிங்க்மான்.கொம் உட்பட மேலும் சில இணையத்தளங்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் வெடிங்க்மான்.கொம் (weddingman.com) சிறந்த திருமணச் சேவைத் தளமாக முதல் இடத்தைப் பெற்றது மகிழ்ச்சிக்குரியதே.

பல்லாயிரக்கணக்கான பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்களை கொண்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு சிறந்த திருமணத் தளமான வெடிங்க்மான் (weddingman.com) இம் மாபெரும் திருமண சேவை துறைசார் நிகழ்வில் பங்குபற்றி பெரும்பாலான மக்களின் வாக்குகளைப் பெற்று தனக்கான முதலிடத்தைப் பெற்றது ஒரு சிறப்பம்சம் ஆகும்.

மேலும் இவ் வெடிங்மான் (weddingman.com) இணையத்தளமானது உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இவ் இணையத்தளத்தில் இலகுவாகவும் இலவசமாகவும் பதிவு செய்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இங்கு ஏராளமான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இலகுவான முறையில் வரன்களை தேடி கண்டறியக்கூடியதாக இத் தளம் காணப்படுகின்றது.