கனடா செய்திகள்
கனடாவில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்
03/07/2020பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல்பொருள் அங்காடிக்கு சென்றிருந்த ஒரு தாயும் மகளும் பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வரும்போது, கார் பார்க்கிங்கில் அவர்கள் மீது கார் ஒன்று மோதியுள்ளது.
விரைந்து வந்த பொலிசார், Squamish பகுதியைச் சேர்ந்த இவானா என்ற அந்த பெண்ணையும், அவா கிரேஸ் ஞானப்பிரகாசம் என்ற அந்த இரண்டு வயது குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.
ஆனால், படுகாயமடைந்த அவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.
அவாவின் தந்தை ஜேசன் ஞானப்பிரகாசம், அவாவுக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். Squamish Hospital Foundationக்கு தங்கள் நன்கொடைகளை அளிக்குமாறு குடும்பத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவாவின் குடும்பத்தார் இன்று அவளுக்காக அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்கள்.