New year offer 2017

கனடா செய்திகள்

ரொரன்ரோவில் மாடியின் பால்கனியில் இருந்து கீழே விழுந்த சிறுமி! சந்தேகப்படும் பொலிசார்...

03/12/2020

கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் இருந்து 6 வயது சிறுமி கீழே விழுந்த நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரொரன்ரோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தே செவ்வாக்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 2 மணிக்கு சிறுமி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து உயிருக்கு போராடிய சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிறுமி உயிருக்கு போராடி வரும் நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் பொலிசார் கூறுகையில், சிறுமி அடுக்குமாடி வீட்டின் 12வது மாடியில் வசித்து வருகிறார்.

ஆனால் அவர் எந்த மாடியின் பால்கனியில் இருந்து கீழே விழுந்தார் என்பது இன்னும் தெரியவில்லை, இதனால் அவர் விழுந்த உயரமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதே நேரம் சிறுமி பால்கனிக்கு எப்படி சென்றார் என விசாரித்து வருவதால் இதை சந்தேகத்துக்குரிய வழக்காகவே பதிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.