New year offer 2017

கனடா செய்திகள்

கனடா அருமையான நாடு என்றால் ஏன் இத்தனை கனேடியர்கள் வேறு நாடுகளில் வாழ்கிறார்கள்?

03/12/2020

ராஜ குடும்பத்திலிருந்து வெளியேற முடிவு செய்ததும் ஹரியும் மேகனும் குடியேற தேர்வு செய்த முதல் நாடு கனடாதான்.

ஆனால், ராஜ குடும்பத்தினர்களாக அவர்களை வரவேற்ற கனேடியர்கள், ஹரியும் மேகனும் இனி ராஜ குடும்ப உறுப்பினர்கள் இல்லை என்று தெரியவந்ததும், அவர்களது பாதுகாப்புச் செலவு தங்கள் தலையில் விழுந்துவிடும் என்ற கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர், கனடா அருமையான நாடு என்றால் ஏன் இத்தனை கனேடியர்கள் வேறு நாடுகளில் வாழ்கிறார்கள் என மேகனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கனடாவில் வாழ ஹரி மேகன் தம்பதி தேர்ந்தெடுத்த இடம் வான்கூவர் தீவு. வான்கூவரைப் பொருத்தவரை அங்கிருப்பது ஒரு விமான நிலையம், சில உணவகங்கள் மற்றும் சில காபி ஷாப்கள் அவ்வளவுதான்...

அங்குள்ளவர்களுக்கு பொழுதுபோக்கு என்றால், நாய்களைக் கூட்டிக்கொண்டு வாக்கிங் செல்லுதல், உள்ளூர் பூங்காக்களுக்கு செல்லுதல் மற்றும் தாவரவியல் பூங்காக்களுக்கு செல்லுதல்... ஓய்வு பெற்றவர்களுக்கு வேண்டுமானால் வான்கூவர் வாழ பொருத்தமான இடமாக இருக்கலாம்.

இன்னொரு வகையில் சொன்னால் கனேடியர்கள் எளிய வாழ்க்கைக்காக தேர்ந்தெடுக்கும் இடம் அது.

எளிய என்று சொல்வதற்கு பதில் போர் அடிக்கும் என்றும் சொல்லலாம் என்கிறார் Janet Street-Porter என்னும் அந்த பிரபல பிரித்தானிய பத்திரிகையாளர்.

கனடா அவ்வளவு அற்புதமான நாடு என்றால், ஏராளமான கனேடிய பிரபலங்கள் ஏன் வேறு நாடுகளில் சென்று வாழ்கிறார்கள் என்று கேள்வி எழுப்பும் Janet, அதற்கு உதாரணமாக Chelseaவில் வாழும் Bryan Adams, ஹாலிவுட்டில் வாழும் Rosling, பாரீஸிலும் லாஸ் வேகஸிலும் காலத்தை கழிக்கும் Celine Dionஐயும் காட்டுகிறார்.

ஆக, விடுமுறைக்காக கனடாவுக்கு செல்வது வரை பரவாயில்லை, ஆனால் அங்கேயே வாழ்வது என்றால் யோசிக்கவேண்டியதுதான் என்கிறார்.

அதாவது நம் நாட்டை விட்டு விட்டு ஏன் இப்படி போர் அடிக்கும் வான்கூவருக்கு சென்றீர்கள், தயவு செய்து திரும்பி வந்துவிடுங்கள் என்கிறார் அவர்.