கனடா செய்திகள்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவியையும் விட்டுவைக்காத கொரோனா!
03/13/2020கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதேவேளை கனடா பிரதமர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
பிரதமரின் மனைவி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற பரிசோதனையின் பின்னர் அவருக்கு கொரேனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
எனினும் தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை என்பதுடன் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்களின் அறிவுரை காரணமாக பிரதமர் தனது உடல்நிலையை அவதானித்தவாறு நாளாந்த நடவடிக்கைளில் ஈடுபடுவதுடன் ,அவர் வீட்டிலிருந்து பணிபுரிவதாகவும் அறிக்கையொன்றில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.