கனடா செய்திகள்
கொரோனாவுக்கு எதிராக தயாரானது இராணுவம்! வெளியான வர்த்தகமானி அறிவித்தல்...
03/17/2020கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்குரிய அரசாங்கத்தின் நடவடிக்கைளுக்கு உறுதுணையாக களமிறங்க இராணுவத்தினர் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரசினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியில் இராணுவ மருத்துமனையொன்று தயார் நிலையில் உள்ளதென சற்று முன்னர் அதிபர் தனதுரையில் தெரிவித்திருந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள அரசாங்கத்தின் வர்த்தகமானி அறிவித்தலில், மருத்துவமனைகள், வர்த்தக அங்காடிகள், சுகாதார கட்டுப்பாகள் என அரசாங்கத்தின் அனைத்துகட்டுமானங்களிலும் அவசர தேவைகளுக்கு அமைய இராணுவத்தின் சேவை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது