கனடா செய்திகள்
அமெரிக்கா தவிர்த்து பிற நாட்டினருக்கு கதவடைக்கும் கனடா!
03/17/2020உலகை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கனடா நாட்டு மக்களுக்கு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ பேசும்போது, “கோவிட் காய்ச்சல் பரவுதலைத் தடுக்க, கனடா இல்லாத பிற நாட்டு மக்கள் கனடாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்றும், இந்தத் தடையிலிருந்து அமெரிக்காவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் முக்கிய அதிகாரிகள், அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு இத்தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் 441 பேருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை கனடாவில் கோவிட் காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர்.
கோவிட்-19 காய்ச்சல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபிக்கு ட்ரூடோவுக்கு இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.