New year offer 2017

கனடா செய்திகள்

குரோஷியாவின் தலைநகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

03/22/2020

குரோஷியாவின் தலைநகரான ஜாக்ரெப்பின் வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது

இதன் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் பல வாகனங்கள் இடிபாட்டுக்குள் சிக்கி சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன், இதனால் தீ விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அல்ஜசீரா செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக பலர் காயமடைந்துள்ளதுடன் 15 வயது சிறுவனொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

6.0 ரிச்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கமானது ஜாக்ரெப்பிலிருந்து வடக்கே 7 கிலோமீற்றர்  தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு பூட்டப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது