New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் கொரோனா அச்சுறுத்தல்... மகளுக்கு நிச்சயதார்த்த விழா நடத்தியதாக மொன்றியல் எதிர்க்கட்சித்தலைவர்!

04/02/2020

மொன்றியல் எதிர்க்கட்சித்தலைவர் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் நேரத்தில் மகளுக்கு நிச்சயதார்த்த விழா நடத்தியதாக பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் பொலிசாரை அழைத்துள்ளார்.

செவ்வாயன்று மொன்றியல் எதிர்க்கட்சித் தலைவரான Lionel Perez, தனது மகளுக்கு நிச்சயதார்த்த விழா நடத்தியுள்ளார்.

அதுவும், அவரது மகள் கனடாவிலும், வருங்கால மருமகன் நியூயார்க்கிலும் இருக்கும் நிலையில், வீடியோ கான்பரன்சிங் முறையில்தான் அந்த நிச்சயதார்த்த விழா நடந்துள்ளது.

ஆனால், விழாவை சிறப்பிக்கும் வகையில் Lionel ஒரே ஒரு விடயம் செய்துள்ளார். தனது வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில், தன் நண்பர் ஒருவரை வைத்து இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார் அவர்.

அக்கம் பக்கத்தில் வசிப்போர் தங்கள் வீடுகளிலிருந்து தங்கள் கைகளை அசைத்து மணமகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒருவர் மட்டும் பொலிசாரிடம் புகாரளித்துவிட்டார். பல பொலிஸ் கார்கள் Lionel வீட்டை சூழந்துகொள்ள, விழாவை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர் பொலிசார்.

ஆனால், தான் விதிகளுக்குட்பட்டே அந்த விழாவை நடத்தியதாக தெரிவிக்கிறார் Lionel.

தனது மகளின் நிச்சயதார்த்தத்தின்போது, தானும் தன் குடும்பத்தினரும் மட்டுமே தன் வீட்டில் இருந்ததாகவும், தனது நண்பர்கூட, வீட்டுக்கு வெளியில் இருந்துதான் இசை நிகழ்ச்சி நடத்தியதாகவும் தெரிவிக்கிறார் Lionel.

மூன்று வீடுகள் தள்ளி வசிக்கும் தன் பெற்றோரைக்கூட தான் விழாவிற்கு அழைக்கவில்லை என்கிறார் அவர்.

இதற்கிடையில், Lionel யூத மத அடையாளமான கிப்பா அணிபவர் என்பதால், யூத மத எதிர்ப்பு காரணமாக இந்த புகார் அளிக்கப்பட்டதா என்று கேட்டால், அதற்கு கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.