New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்கா குற்றச்சாட்டு - சீனா எல்லை மீறி போகிறது

05/22/2020

வாஷிங்டன் : 'கொரோனா' விவகாரத்தில் சீனா மீதுஅமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் 'பொருளாதார கொள்கைகள் ராணுவ நடவடிக்கைகள் பொய் பிரசாரம் மனித உரிமை மீறல் ஆகியவற்றிலும் சீனா எல்லை மீறிச் செயல்படுகிறது' என அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.


'கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.இந்நிலையில் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள20 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் அதிக வர்த்தகம் செய்ய சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல் சீனாவில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன. அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சீன ராணுவத்துக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் மூலம் சீனா கம்யூனிச கொள்கைகளில் இருந்து விடுபடும்; அது தாராளமய கொள்கைக்கு மாறும் என அமெரிக்கா நினைத்தது. ஆனால் சீனாவின் நிலைப்பாடு தொடர்ந்து மோசமாகி வருகிறது. பொருளாதார கொள்கைகள் ராணுவ நடவடிக்கைகள் பொய் பிரசாரம் மனித உரிமை மீறல் என பல வகையிலும் அந்நாடு எல்லை மீறி செயல்படுகிறது. இதற்கு மேலும் சீனாவுடன் உறவு தொடர்வது அமெரிக்காவுக்கு நல்லதல்ல.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உலகுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதை ஊடகங்கள் கவனிக்கத் தவறி விட்டன. சீனாவில் 1949ல் இருந்து மிக மோசமான சர்வாதிகார ஆட்சிநடந்து வருகிறது.தன் அரசியல் மற்றும் கொள்கை மூலம் சீனாவுக்கே சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆபத்தாக அமைந்து விட்டது. இதை உலக நாடுகள் தற்போது உணரத் துவங்கி விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

பொய்த் தகவல்அதிபர் டொனால்டு டிரம்ப் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்ப தாவது:சீனா தொடர்ந்து பொய்த் தகவல்களை பரப்பி வருகிறது. இந்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனை வெற்றி பெற வைப்பதற்காக அவருக்கு ஆதரவாக சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கருத்து ெவளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வாய்ப்புஅமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்காசியாவுக்கான செயலர் அலைஸ் வெல்ஸ் கூறியதாவது:இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்வதற்கு தயாராக உள்ளோம்.இந்த கொரோனா பாதிப்பு காலத்தில் இதற்கான வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது அந்த நாட்டுக்கு மிகப் பெரிய பொன்னான வாய்ப்பு. பல்வேறு நாடுகள் சீனாவுடனான உறவை துண்டிக்கத் தயாராக உள்ளன.அதை இந்தியா சரியாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

இந்தியாவுக்கு வாய்ப்பு

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்காசியாவுக்கான செயலர் அலைஸ் வெல்ஸ் கூறியதாவது:இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்வதற்கு தயாராக உள்ளோம்.இந்த கொரோனா பாதிப்பு காலத்தில் இதற்கான வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.