New year offer 2017

கனடா செய்திகள்

ஒரே நாளில் அமெரிக்கா, பிரேசிலில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா

06/27/2020

வாஷிங்டன்: அமெரிக்கா, பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், ஐரோப்பியா, அமெரிக்காவில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பரவல் சற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 663 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,27,640 ஆக உயர்ந்தது. புதிதாக 47,224 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு, 25,52,839 ஆக உயர்ந்துள்ளது.

வட அமெரிக்கா:


வட அமெரிக்காவில் இதுவரை 29,69,904 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,64,048 பேர் பலியாகி உள்ளனர். இங்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புள்ள நாடாக மெக்ஸிகோ(பாதிப்பு - 2,02,951; பலி - 25,060), கனடா(பாதிப்பு - 1,02,794; பலி - 8,508) உள்ளது.
 

 

 

திணரும் பிரேசில்:


தென் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது. அங்கு 20,49,002 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 79,541 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு பிரேசிலில் அதிகபட்சமாக 12,80,054 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 56,109 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46,907 பேருக்கு தொற்று உறுதியானது; 1,055 பேர் பலியாகினர்.