New year offer 2017

கனடா செய்திகள்

பாஸ்போர்ட்டில் வெளிநாட்டு முகவரிக்கு அனுமதி

10/29/2020

துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் நம் நாட்டினர் தங்கள் 'பாஸ்போர்ட்'களில் அங்குள்ள முகவரியை இணைத்துக் கொள்ளலாம் என துாதரக அதிகாரி கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் அந்நாட்டில் வசிக்கும் முகவரியை 'பாஸ்போர்ட்'களில் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து துபாயில் உள்ள இந்திய துாதரக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐக்கிய அரபு நாடுகளில் பணியாற்றும் பலருக்கும் நம் நாட்டில் நிரந்தர மற்றும் செல்லத்தக்க முகவரி இல்லை என தெரிகிறது. இதனால் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் முகவரியை அவர்களின் பாஸ்போர்ட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போது பயன்பாட்டில் உள்ள பாஸ்போர்ட்டில் வெளிநாட்டு முகவரியை சேர்க்க இயலாது. அதனை மாற்றம் செய்து புதிதாக பெறும்போது முகவரியை இணைத்துக்கொள்ளலாம்.இதற்கு அவர்கள் வசிக்கும் வாடகை, சொந்த வீடு தொடர்பான ஆவணங்கள் அல்லது உரிய இருப்பிடச்சான்று தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.