New year offer 2017

கனடா செய்திகள்

இலங்கையை வேட்டையாடும் சீனா:அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்

10/29/2020

கொழும்பு: ''இலங்கையை வேட்டையாட சீனா துடிக்கிறது; ஆனால், நாங்கள் நட்பு நாடாக பாவிக்கிறோம்,'' என, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

மைக் போம்பியோ, கொழும்புவில், இலங்கை வெளியுறவு துறை அமைச்சர், தினேஷ் குணவர்த்தனா உடன், பேச்சு நடத்திய பின், செய்தியாளர்களிடம் பேசியதாவது:உலகில், சர்வ வல்லமையுள்ள நட்பு நாடாக, இலங்கை விளங்குகிறது. சுதந்திரமான இந்திய- பசிபிக் பிராந்தியத்தின் அடையாளச் சின்னமாக, இலங்கை உருவெடுக்க வாய்ப்புள்ளது.

இத்தகைய சூழலில், சீனாவை ஆளும் கம்யூ., கட்சி, இலங்கையை வேட்டையாடி, சுரண்டத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்காவோ, இலங்கையை நட்பு நாடாகவே பார்க்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆக்கபூர்வ பேச்சு நடத்தப்பட்டது. ஜனநாயக மாண்புகளை பாதுகாக்க, இலங்கைக்கு அமெரிக்கா தோள் கொடுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

சமீபகாலமாக, இந்திய - பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சீனாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதிக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு வலுசேர்க்க, இலங்கையில் தன் ஆதிக்கத்தை பரப்பும் முயற்சியில், சீனா தீவிரமாகஇறங்கியுள்ளது.

இத்தகைய சூழலில், மைக் போம்பியோவின் இலங்கை வருகை, சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை - சீன உறவில், அமெரிக்கா தலையிடுவதாக, கொழும்புவில் உள்ள, சீன துாதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.