New year offer 2017

கனடா செய்திகள்

ஒரு மணி நேரத்தில் முடிந்த பதவியேற்பு விழா

01/21/2021

* இந்திய நேரம் இரவு 7:50 மணி: 'இது அமெரிக்காவுக்கு புதிய நாள்' என ஜோ பைடன் டுவிட்டரில் பதிவு.

* 7:52 மணி: வாஷிங்டனில் உள்ள செயின்ட் மோத்தீவ் சர்ச்க்கு ஜோ பைடன் - மனைவி ஜில் பைடன் வருகை.

* 8:15 மணி : 'எனது நண்பர் ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். இது உங்களுக்கான நேரம்' என முன்னாள் அதிபர் ஒபாமா டுவிட்டரில் பதிவு.

* 9:00 மணி : முன்னாள் அதிபர் ஒபாமா - மிச்செல் ஒபாமா கேப்பிடோல் பகுதிக்கு வருகை.

* 9:12 மணி : அதிபர் ஜோ பைடன் - ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் - கணவர் டக்லஸ் எம்ஹோப் கேப்பிட்டோல் வருகை.
* 9:30 மணி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ், உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் கேப்பிட்டோல் வருகை.

* 9:35 மணி : முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் கேப்பிட்டோல் வருகை.

* 9:45 மணி : பதவி ஏற்பு நடைபெறும் இடத்துக்கு கமலா - எம்ஹோப் வருகை.

* 9:50 மணி : பதவி ஏற்பு நடைபெறும் இடத்துக்கு பைடன் - ஜில் பைடன் வருகை.

* 9:55 மணி : செனட் எம்.பி., எமி ஜீன் கிளோபுசார் வரவேற்பு உரை.

* 10:05 மணி : அமெரிக்க தேசிய கீதத்தை பிரபல பாடகி லேடி காகா பாடினார்.

* 10:10 மணி : அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு. உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
* 10:12 மணி : நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் இசை நிகழ்ச்சி நடந்தது.

* 10:18 மணி: 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

* 10:22 மணி : அதிபர் பைடன் பதவியேற்பு உரை தொடக்கம்.

* 10:43 மணி : உரை நிறைவு.

விமானங்கள் நிறுத்தம்

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சி முடியும் வரை ( நேற்று இரவு 10 - 12 மணி வரை) வாஷிங்டன் சர்வதேச விமான நிலையம் வரும் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.