New year offer 2017

இலங்கை செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு

12/05/2017

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் பொலிஸாரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டிருந்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மீட்கப்பட்ட போதைப்பொருள் வழக்குகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டதோடு, பணப்பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதில், பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.