New year offer 2017

இலங்கை செய்திகள்

அனைத்து துறைகளிலும் ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் ஜனாதிபதி

12/06/2017

நாட்டை முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின் நாட்டின் அனைத்து துறைகளிலும் ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளில் இருந்து அனைத்து தரப்பிலும் இந்த ஒழுக்கம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மின்னேரிய இராணுவ முகாமில் தலைமைத்துவப் பயிற்சிகளை பெற்ற சமுர்த்தி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி பிற்பகல் மின்னேரிய இராணுவ பயிற்சி முகாமுக்கு சென்றிருந்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித பனன்வல உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, இராணுவத்தினரிடம் இருந்த ஒழுக்கம் காரணமாகவே உலகில் மிக மோசமான பயங்கரவாதிகளை தோற்கடித்து தாய் நாட்டை விடுவித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடிந்தது எனக் கூறியுள்ளார்.