New year offer 2017

இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளின் காலத்தில் நாம் யாரிடமும் கையேந்தவில்லை

12/06/2017

போருக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள் என வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து பேசும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் காலத்தில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உச்சமாக இருந்தது.

நாங்கள் யாரிடமும் கையேந்தியிருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் நிழல் அரசாங்கம் இயங்கிபோது இருந்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கியதாகவே எமது வளர்ச்சி இருந்தது.

இன்று அந்த நிலை மாறி தென்னிலங்கையை நாடி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பின்தங்கிய பிரதேசங்களை வளப்படுத்துவதன் மூலமே ஆரோக்கியமான வளர்ச்சியை காணமுடியும். மத்திய அரசைப் பொறுத்தவரை எம்மை காரணம் காட்டி உலக நாடுகளிடம் இருந்து பெருந்தொகை கடன்களை பெற்றுக் கொண்டாலும் அதில் சொற்ப அளவு நிதியையே எமக்கு ஒதுக்குகின்றது.

அதனைக் கொண்டே நாம் உதவித்திட்டங்களை செயற்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.