New year offer 2017

இலங்கை செய்திகள்

மகிந்த ராஜபக்சவின் கொக்கரிப்பும் பலவீனமான ஆட்சியாளர்களும்

12/06/2017

உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தயாராகி விட்டார். நாடு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது, நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்கிற முழக்கத்துட னேயே அவர் தனது பரப்புரையை பதுளையில் ஆரம்பித்திருக்கிறார்.

 

தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபுறத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் போது மறுபுறத்தில் மகிந்த மார்தட்டிப் பேசுகிறார். மக்கள் பலம் அதாவது சிங்கள மக்களின் பலம் தனக்கேயிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவேன் என்கிறார் அவர்.

சிங்கள இனவாதம் மற்றும் தேசியவாதம்தான் மகிந்தவின் பரப்புரையின் அடிநாதம் என்பது அவரது பேச்சில் தெளிவாகத் தெரிந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்துதான் பதவியில் இருக்கின்றன என்று அவர் கூறுவதன் மூலம் சிங்கள மக்களின் ஆன்மாவைத் தட்டியெழுப்ப அவர் முயல்கிறார்.

தமிழர்களோடு சேர்ந்து ஆள்பவர்களையா தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்று சிங்கள மக்களின் மனங்களைச் சீண்டுகிறார். அதற்கூடாகத் தனது ஆதரவைப் பெருக்கிக் கொள்ளக் கள்ளத்தனமாக முயற்சிக்கிறார்.

இந்தப் பக்கத்தில் நல்லாட்சி என்று கூறிக்கொ