New year offer 2017

இலங்கை செய்திகள்

மைத்திரியின் சந்தேகம் தீர்த்து வைக்க ஐந்து நீதிபதிகள்

01/10/2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக முடிவு செய்வதற்காக, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தனது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நிறைவடைகிறதா அல்லது 2021ஆம் ஆண்டு நிறைவடைகிறதா என்று விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினை நடத்தி, முடிவை அறிவிக்கும் என்று தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் அறிவித்துள்ளார்.

இதற்காக நாளை உச்சநீதிமன்றத்தின் திறந்த அமர்வு ஒன்றில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் 2020 அல்லது 2021 வரையான காலப் பகுதியிலானதா என்பது குறித்து எதிர்வரும் 14ஆம் நாளுக்கு முன்னதாக தெரியப்படுத்துமாறு நேற்றைய தினம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.