New year offer 2017

இலங்கை செய்திகள்

மஹிந்த ஆட்சியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சலுகைகள்

01/10/2018

கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் பல்வேறு வகையிலும் பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியினுள் பல்வேறு வகையிலும் பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு சலுகை அளிப்பதற்காக பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக வாய்ப்பளிக்கப்பட்டது.

அந்த மேன்முறையீடுகள் தொடர்பில் அமைச்சரவைக்கு சிபாரிசுகளை முன்வைப்பதற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

அதன் மூலம் மேன்முறையீட்டினை பொறுப்பு எடுக்கும் கால எல்லை பின்னர் 2017ஆம் ஆண்டு மே மாதம் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

அதன் போது, மேலும் 14 மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றன. அதன் அடிப்படையில், அவற்றினை பரிசீலித்து சிபாரிசுகளை முன்வைப்பதற்காக அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை உபகுழுவினை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான இந்தக் குழுவில், அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, கயந்த கருணாதிலக்க ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.