New year offer 2017

இலங்கை செய்திகள்

நாடாளுமன்றில் அமளி ஏற்பட சபாநாயகரே காரணம் வாசுதேவ

01/10/2018

ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் சபாநாயருக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிணை முறிப்பத்திர விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, எதிர்க்கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சபாநாயகரின் நடவடிக்கைகள் காரணமாவே சபையில் அப்போது அமளி ஏற்பட்டதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் தட்டிகளை ஏந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடுவுக்கு வந்து எதிர்ப்பில் ஈடுபட்டதுடன் மோதல்களும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.