New year offer 2017

இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பல குற்றவாளிகள்

01/11/2018

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல்வேறு குற்றவாளிகள் மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பங்களுடன் தொடர்புடைய பலர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இம்முறை தேர்தல் தொடர்பில் 243 சம்பவங்கள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலான 287 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த முறைப்பாடுகளில் அதிகமான முறைப்பாடுகள் அரசியல் நோக்கங்களை கொண்ட விருந்துகள் மற்றும் சட்டவிரோத பிரசாரங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவும் பொலிஸாரும் இந்த நிலைமையை குறைக்க மிகப் பெரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.