New year offer 2017

இலங்கை செய்திகள்

இந்தியா செல்கிறார் இலங்கை வெளிவிவகார அமைச்சர்

01/11/2018

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று ஆரம்பமாகும் தர்ம தம்ம மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காகவே அவர் இந்தியா பயணமாகவுள்ளார்.

குறித்த மாநாடு எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்த மாநாட்டில், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதம விருந்தினராக பங்கேற்கிறார்.

சிறப்பு விருந்தினர்களாக, இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, பீகார் மாநில ஆளுனர் சத்யபால மாலிக், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஸ்குமார், இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்குப் பிராந்தியத்துக்கான செயலர் பிரீதி சரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் திலக் மாரப்பன இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.