New year offer 2017

இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் விசேட அறிக்கை

02/12/2018

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சபாநாயகரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்,

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சுயாதீனமானதும், நீதியானதுமான அடிப்படையிலும் முன்னுதாரணமாகவும் நடைபெற்றது.

இது பொதுஜன ஜனநாயகத்தின் வெற்றியாகவே கருதப்பட வேண்டும். இம்முறை தேர்தலின் போது பாரிய தேர்தல் சட்ட மீறல்கள், தேர்தல் வன்முறைகள் போன்ற கசப்பான சொற்களை கேட்க கிடைக்கவில்லை.

ஜனநாயக பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக மக்கள் வாக்களித்தமைக்காக நன்றி பாராட்டுகின்றேன்.

புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.