New year offer 2017

இலங்கை செய்திகள்

ஐ தே க மற்றும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

02/12/2018

பதுளையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

பதுளை - மீகஹகிவுல அருகே கந்தகெட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் தாக்க முயன்ற நிலையில் இருதரப்பும் பயங்கரமாக மோதிக் கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஐவர் தற்போது மீகஹகிவுல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.