New year offer 2017

இலங்கை செய்திகள்

புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் ஆபத்து ஜீஎல்பீரிஸ்

03/12/2018

நாட்டு மக்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் கவனத்தை கண்டி கலவர சம்பவங்கள் தொடர்பான பக்கம் திசை திருப்பி, பலவந்தமாக காணாமல் போக செய்வதில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாக்கும் சட்டத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதே விதமாக அரசாங்கம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றும் ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பலவந்தமாக காணாமல் போக செய்வதில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு பௌத்த பிக்குமார் எதிர்ப்பு தெரிவித்தால், அதனை நிறைவேற்றுவது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், கண்டி சம்பவங்களை பயன்படுத்தி பௌத்த சங்கத்தினரின் கோரிக்கையை ஒதுக்கி வைத்து விட்டு சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின கவனத்தை வேறு பிரச்சினைகள் பக்கம் திசை திருப்பி விட்டு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டமூலங்களை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு சம்பந்தமாகவும் இப்படியான நடவடிக்கையை கையாளலாம் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.