New year offer 2017

இலங்கை செய்திகள்

அவசரகால சட்டம் தொடர்பில் பாதுகாப்பு சபையே தீர்மானிக்கும்

03/14/2018

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை நீக்குவது தொடர்பில் பாதுகாப்பு சபை கூடி தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

குறுங்காலத்துக்கு அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டுமாக இருந்தால், நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.

இந்தநிலையில் எதிர்வரும் தினங்களில் பாதுகாப்பு சபை ஒன்று கூடி, இதுகுறித்த தீர்மானத்தை மேற்கொண்டு, நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து அறிக்கையை கோரி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.