New year offer 2017

இலங்கை செய்திகள்

அவுஸ்திரேலியாவில் வாழ ஆசைப்படும் இலங்கையர்களுக்கு பெரும் ஏமாற்றம்

04/13/2018

அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, வருடமொன்றிற்கு 30 ஆயிரம் வரையில் குறைக்க அந்நாட்டு அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான விசா பரிசீலனை நடைமுறைகளால் இது சாத்தியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தற்போது வருடமொன்றிற்கு 190,000 பேர் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் புதிய கடுமையான விசா பரிசீலனை நடைமுறைகளால், வருடத்திற்கு 160,000 - 170,000 பேர் மாத்திரமே குடியேற அனுமதிக்கப்படுவர்.

இது 2010ம் ஆண்டுக்கு முன்னர் வருடமொன்று இங்கு குடியேற அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஒப்பானதாகும்.

இதேவேளை அரசு அறிமுகப்படுத்தியுள்ள கடுமையான விசா பரிசீலனை நடைமுறைகளால், இவ்வருடம் இங்கு நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைவடையலாம் என்பதை அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் Peter Dutton உறுதிப்படுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பெருமளவானோர் குடியேறியுள்ளனர். அதில் பலர் நிரந்தர குடியுரிமைக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.