New year offer 2017

இலங்கை செய்திகள்

இலங்கை முழுவதும் அடைமழை

04/13/2018

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் அடை மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை நேரங்களில் மழை பெய்யும் எனவும் ஏனைய பிரதேசங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ, மேல், ஊவா மற்றும் தெற்கு மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும்.

அந்த பிரதேசங்களில் கடும் காற்றும் வீசக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்த்து கொள்ளுமாறு திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருக்கோணமலை வரையிலான கடல் பிரதேசங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் பிரதேசங்களில் 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் சந்தர்ப்பங்கள் உள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.