New year offer 2017

இலங்கை செய்திகள்

யானைகளின் அட்டகாசம் பாதிக்கப்படும் முல்லைத்தீவு மக்கள்

04/14/2018

முல்லைத்தீவு - விசுவமடு, மாணிக்கபுரம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் பாரிய அளவில் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொதுமக்கள் சார்பில் குறித்த பகுதியை சேர்ந்த பெ.நாகம்மா (வயது 55) என்பவர் கருத்து தெரிவிக்கையில்,

வறுமைக் கோட்டின் கீழ் வாடும் குடும்பங்களை காட்டு யானைகளும் விட்டு வைக்கவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன் எனது தற்காலிக கொட்டிலை யானை தாக்கி அழித்துள்ளது.

இதில் இருந்து உயிர் தப்பி, ஊர் மக்கள் உதவியுடன் தற்காலிக கொட்டிலை புனரமைத்து வாழ்ந்து வருகின்றேன்.

இது தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியும், இதுவரை எதுவித இழப்பீடுகளோ அல்லது தற்காலிக வீட்டினை திருத்தி கொடுக்காத நிலையில் தான் வாழ்ந்து வருகின்றேன்.

சில தினங்களுக்கு முன் மீண்டும் என் காணிக்குள் புகுந்த யானைகள் பலா மரத்தில் உள்ள பலா காய்களை அழித்துள்ளதுடன் பலா, மா மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

இரண்டு தென்னை மரங்களை நிலத்தில் வீழ்த்தி சாய்த்துள்ளது. தேங்காய் விற்கும் விலையில் எனது சொத்தாக இருந்த மூன்று தென்னைகளில் இரண்டை அடியோடு பிரட்டிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காட்டு யானைகளின் அட்காசத்தினால் தாம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.