New year offer 2017

இலங்கை செய்திகள்

மகத்தான பணிக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் தர்ஷன ஹெட்டியாராச்சி

04/14/2018

யாழ். மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், தொழில் துறை மேம்பாடு ஆகியவற்றை கட்டி யெழுப்பி கொடுக்கின்ற மகத்தான பணிக்கு தொடந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் யாழ். கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 30 வருட கால யுத்தத்திற்கு முன்னர் இந்த நாட்டில் தமிழ், சிங்கள மக்கள் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து உள்ளனர்.

அத்துடன், இனத்தால் வேறுபட்டவர்களாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்ற போதிலும் மொழி, சமயம், கலாச்சாரம், பண்பாடு விருந்தோம்பல், பாரம்பரியம், நாகரிகம் என்று வாழ்க்கை முறைமையின் ஒவ்வொரு அம்சத்திலும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒன்றுபட்ட தன்மைகள் காணப்படுகின்றன.

மேலும், பிரிவினைவாதம், யுத்தம் ஆகியன தமிழ், சிங்கள மக்களை பிரித்து விட்டபோதிலும் யுத்தத்துக்கு பிந்திய அமைதி சூழல் மீண்டும் இரு இனங்களும் ஐக்கியம், சமாதானம், சகோதரத்துவம், சாந்தி, சகிப்புத் தன்மை, புரிந்துணர்வு ஆகியவற்றுடன் வாழ கூடிய இயல்பு நிலைமையை மீண்டும் ஏற்படுத்தி தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.