New year offer 2017

இலங்கை செய்திகள்

பெருந்தொகை பணத்திற்காக சுதந்திர கட்சியை காட்டிக் கொடுத்த எட்டு பேர்

04/15/2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் எட்டு பேர் கட்சியை காட்டிக் கொடுத்து விட்டதாக அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது இந்த எட்டு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சூழ்ச்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சூழ்ச்சி செய்த எட்டு பேரில் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவருக்கு கோடிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்பொழுது ராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வரும் ஒருவரை அடுத்த தேர்தலில் தேசியப் பட்டியலில் சந்தர்ப்பம் வழங்கவும், மற்றுமொருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் திட்டமிட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்காத காரணத்தினால் ஆதரவாக வாக்களிக்கத் திட்டமிட்டிருந்தவர்களும் எதிராக வாக்களித்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.