New year offer 2017

இலங்கை செய்திகள்

தேசிய அரசாங்கத்தினை முன்னெடுத்துச் செல்ல நாடாளுமன்றின் அனுமதி தேவை

04/15/2018

தேசிய அரசாங்கத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நாடாளுமன்றின் அனுமதி தேவை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு வார இறுதி ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறியிருப்பதனால் தேசிய அரசாங்கம் ரத்தாகியுள்ளது.

எனவே, தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நாடாளுமன்றின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல நாடாளுமன்றிடம் அனுமதி பெற்றுக் கொள்ளாமை பாரிய சட்டவிரோதமான செயலாகும்.

உரிய அனுமதி பெற்றுக்கொள்ளாது தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்றால், அரசாங்கத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றின் உதவியை நாட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.